search icon
என் மலர்tooltip icon
    • சிக்கிமில் மொத்தம் 32 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
    • சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதி நடக்கிறது.

    காங்டாக்:

    சிக்கிம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

    சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. இம்மாநிலத்தில் 4.65 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள். காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். சிக்கிமில் இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

    இந்நிலையில், சிக்கிமில் 67.95 சதவீதம் வாக்குகள் பதிவானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதியும், பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதியும் நடைபெறுகிறது.

    • ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி 57 ரன்களை குவித்தார்.
    • குருணல் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 34 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி சென்னை அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவருடன் துவக்க வீரராக களமிறங்கிய ரஹானே 24 பந்துகளில் 36 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிவம் தூபே மற்றும் சமீர் ரிஸ்வி முறையே 3 மற்றும் 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக சென்னை அணி 90 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி 57 ரன்களை குவித்தார். கடைசியில் களமிறங்கிய எம்.எஸ். டோனி 9 பந்துகளில் 28 ரன்களை குவித்தார். இதன் மூலம் சென்னை அணி போட்டி முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது.

    லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய குருணல் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாயினிஸ், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னாய் மற்றும் மொசின் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • இவர்கள் உள்ளூர் கன்னட மக்கள் என்று தெரிவித்த அவர்கள்,
    • தொடர்ந்து நாங்கள் கன்னடத்தில் பேசியது, அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கன்னட நடிகை ஹர்ஷிகா பூனச்சா. இவர் தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள பிரபலமான இடத்தில் அமைந்துள்ள ரெஸ்டாரன்டில் இரவு உணவு முடித்துவிட்டு காரில் அமர முயன்றபோது, மோசமான வார்த்தைகள் மூலம் அவதூறு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக நடிகை ஹர்ஷிகா பூனச்சா கூறுகையில் "இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ஃப்ரேசர் நகர்ப்பகுதிக்கு அருகில் உள்ள புலிகேஷி நகரின் மஸ்ஜித் சாலையில் உள்ள கரமா என்ற ரெஸ்டாரன்டில் நான் எனது குடும்பத்தினருடன் சாப்பிட சென்றிருந்தேன்.

    நாங்கள் காரில் ஏரிய பின்னர் காரை பார்க்கிங் பக்கத்தில் இருந்து வெளியே எடுத்தபோது, திடீரென்று இருவர் டிரைவர் பக்கம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களது கார் கொஞ்சம் பெரியதாக இருந்ததால், சட்டென்று மூவ் ஆனதால் அவர்கள் மீது உரசியிருக்கிறது.

    நாங்கள் காரை சற்று நகர்த்தியபோது, அவர்கள் இருவரும் அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தினர். மேலும், எனது கணவரின் முகத்தில் தாக்க முயன்றனர். இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் எனக் கூறினர். என்னுடைய கணவர் மிகவும் அமைதியாக இருந்தார்.

    அப்போது திடீரென 30-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் குவிந்து எனது கணவரின் செயினை பறிக்க முயன்றனர். சற்று நேரத்திற்குள் அவர்களை எங்களுடைய காரை சேதப்படுத்தி, எங்களை தாக்க முயன்றனர். இவர்கள் உள்ளூர் கன்னட மக்கள் என்று தெரிவித்த அவர்கள், தொடர்ந்து நாங்கள் கன்னடத்தில் பேசியது, அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூரில் உள்ள உள்ளூர்வாசிகளான நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம்? நாம் பாகிஸ்தானில் வசிக்கிறோமா? ஆப்கானிஸ்தானில் வசிக்கிறோமா? என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

    • கள்ளக்குறிச்சியில் 75.64 சதவீதம், தருமபுரியில் 75.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.
    • பொள்ளாச்சியில் 72.22 சதவீதம், நாகப்பட்டினத்தில் 72.21 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

    சென்னை:

    தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.

    காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்ட வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.64 சதவீதம், தருமபுரி தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

    ஆரணி- 73.77

    கரூர் - 74.05

    பெரம்பலூர்- 74.46

    சேலம்- 74.55

    சிதம்பரம்- 74.87

    விழுப்புரம்- 73.49

    ஈரோடு- 71.42

    அரக்கோணம்- 73.92

    திருவண்ணாமலை- 73.35

    விருதுநகர்- 72.99

    திண்டுக்கல்- 71.37

    கிருஷ்ணகிரி- 72.96

    வேலூர்- 73.04

    பொள்ளாச்சி- 72.22

    நாகப்பட்டினம்- 72.21

    தேனி- 71.74

    நீலகிரி- 71.07

    கடலூர்- 72.40

    தஞ்சாவூர்- 69.82

    மயிலாடுதுறை- 71.45

    சிவகங்கை- 71.05

    தென்காசி- 71.06

    ராமநாதபுரம்- 71.05

    கன்னியாகுமரி- 70.15

    திருப்பூர்- 72.02

    திருச்சி- 71.20

    தூத்துக்குடி- 70.93

    கோவை- 71.17

    காஞ்சிபுரம்- 72.99

    திருவள்ளூர்- 71.87

    திருநெல்வேலி- 70.46

    மதுரை- 68.98

    ஸ்ரீபெரும்புதூர்- 69.79

    சென்னை வடக்கு- 69.26

    சென்னை தெற்கு- 67.82

    சென்னை மத்தி- 67.35

    • தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவு.
    • அ.தி.மு.க. சார்பில் புகார் எழுப்பப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

    நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    இந்த நிலையில், தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக அ.தி.மு.க. சார்பில் புகார் எழுப்பப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதையடுத்து வாக்குச்சாவடி மையத்தில் அ.தி.மு.க.வினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    கள்ள ஓட்டு போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது வரை சீல் வைக்கப்படவில்லை. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் தலைமையில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க நாங்கள் விரும்புகிறோம்.
    • நம்மை விட ஜெயில் நிர்வாகம் அங்குள்ள கைதிகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

    திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை, வீட்டில் சமைத்த உணவை எடுத்துக்கொள்ள விடாமல் தடுத்து கொலை செய்ய பா.ஜனதா மற்றும் அமலாக்கத்துறை சதி திட்டம் செய்வதாக ஆம் ஆத்மி கட்சி நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தது.

    இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என பா.ஜனதா பதில் அளித்துள்ளது.

    பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர் ஷஜியா இல்மி டெல்லி மாநில கட்சி தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஷஜியா இல்மி கூறியதாவது:-

    அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க நாங்கள் விரும்புகிறோம். நம்மை விட ஜெயில் நிர்வாகம் அங்குள்ள கைதிகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

    எந்த அமைப்பும் அல்லது ஜெயில் நிர்வாகமும் அவரது உடல்நலத்தை கெடுத்து, அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த ஏன் விரும்பனும்?. யாரும் இதுபற்றி ஏன் யோசிக்கனும்?.

    இதுபோன்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. இது போன்ற உணர்வுப்பூர்வமான கருத்துகளை ஆம் ஆத்மி கட்சி தவிர்க்க வேண்டும். இன்சுலின் எடுத்துக்கொள்ள அதிகாரிகள் மறுப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவில் எந்த சிறையிலும் இதைச் செய்ய மாட்டார்கள். நாம் மிகவும் பொறுப்புள்ள ஜனநாயக நாடு. முதலமைச்சர் அல்லது யாராக இருந்தாலும் மறுக்கப்பட வாய்ப்புள்ளதாக நான் நினைக்கவில்லை.

    இவ்வாறு ஷஜியா இல்மி தெரிவித்துள்ளார்.

    • கடந்த மார்ச் 3-ம் தேதி டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா விமான சேவையை மீண்டும் தொடங்கியது.
    • டெல் அவிவ் நகருக்கான விமான சேவை வரும் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா தனது விமான சேவையை நிறுத்தியது. 5 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த மார்ச் 3-ம் தேதி டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா மீண்டும் விமான சேவையை தொடங்கி இருந்தது.

    இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் செல்லும் விமானங்கள் மற்றும் டெல் அவிவ் நகரில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் அனைத்தும் வரும் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்குள்ள நிலவரத்தை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

    ஈரான், இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் யாரும் செல்லவேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சூறையாடுதல் மற்றும் பொய்களை பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கியுள்ளது.
    • இந்த பிரபஞ்சத்தில் பா.ஜனதா மிகப்பெரிய பொய்யர்.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள பகுதிகளில் உள்ள 8 தொகுதிகளில் நடைபெற்றது. அந்த இடங்களில் பிரசாரம் மேற்கொண்டபோது பா.ஜனதா பொய்களை அள்ளி வீசியது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

    சூறையாடுதல் மற்றும் பொய்களை பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கியுள்ளது. பா.ஜனதா கட்சியை போன்று அதிக அளவில் பொய் சொல்ல வேறு கட்சிகள் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் பா.ஜனதா மிகப்பெரிய பொய்யர்.

    மேற்கு திசையில் இருந்து வீசிக் கொண்டிருக்கும் காற்று இந்த முறை பா.ஜனதாவை முற்றிலும் அகற்றிவிடுவது போல் உணர்த்துகிறது. இது பா.ஜனதாவின் முதல் நாளின் முதல் ஷோ பிளாப் போன்று உள்ளது.

    பா.ஜனதா திரும்ப திரும்ப சொல்லுவதை பொதுமக்கள் யாரும் கேட்க விரும்பவில்லை. தற்போது வரை அவர்கள் புனைந்துள்ள கதை, யாரும் கேட்க விரும்பாத வகையில் உள்ளது.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கடைசியாக ஆடிய இரு போட்டிகளில் தோல்வி.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு போட்டிகளில் தோல்வி.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 34 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு போட்டிகளில் வெற்றி, இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஆறு போட்டிகளில் நான்கு வெற்றி, கடைசியாக ஆடிய இரு போட்டிகளில் தோல்வியுற்றது.

    அந்த வகையில், கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி வெற்றியை தொடரவும், கடைசி இரு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள லக்னோ அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பிலும் களம் காண்கின்றன.

    • இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
    • ஈவுத்தொகை வழங்க இன்போசிஸ் நிர்வாக குழு முடிவு.

    இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் பேரக் குழந்தை எக்கிராஹா ரோஹன் தனது ஐந்தாவது மாதத்திலேயே ரூ. 4.2 கோடியை ஈட்டியுள்ளது.

    கடந்த மாதம் நாராயண மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகளை தனது பேரக் குழந்தைக்கு பரிசாக கொடுத்தார். இந்த பங்குகளின் மதிப்பு மட்டும் ரூ. 240 கோடி ஆகும். சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    அப்போது முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில், 2024 நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகையாக ஒரு பங்குக்கு ரூ. 20 மற்றும் சிறப்பு ஈவுத்தொகையாக ரூ. 8 வழங்க இன்போசிஸ் நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.

    இந்த முடிவின் காரணமாக இன்போசிஸ் பங்குதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், எக்கிரஹா ரோஹனின் பங்குகளின் அடிப்படையில் அவருக்கு ரூ. 4.2 கோடி வரை ஈவுத்தொகை கிடைக்கும். 

    ×