Tuesday, March 26, 2024

Rock Cave Temple of Thirukoneswaram and Sequelae

 

மிக அண்மையில் தான் இந்த நூல் பற்றி முதன்முறையாக நான் அறிந்து கொண்டேன். திருமதி தேவா சிவகுமார் அவர்களிடமிருந்து இந்நூலின் அட்டைப்படம் கிடைக்கப்பெற்று இருந்தது. 

Friday, March 22, 2024

போர்த்துக்கல்லில் உள்ள லிஸ்பனில் திருக்கோணேச்சரம் சார்ந்த ஆவணங்கள்

 

1953 ஆம் ஆண்டு காலப்பகுதியில் டாக்டர் பாலேந்திரா அவர்கள் போர்த்துக்கல்லில் உள்ள லிஸ்பன் அருங்காட்சியகங்களில் இருந்த திருக்கோணேச்சரம் சார்ந்த வரைபடங்களையும், சித்திரங்களையும் சேகரித்தார். அவை போர்த்துகீசரால் திருக்கோணேச்சரம் அழிவடைவதற்கு முன்னர் அவர்களால் வரையப்பட்டவை. 

Tuesday, March 12, 2024

இலண்டன் நூலகத்தில் குளக்கோட்டன் கட்டளைகள் ( ஓலைச்சுவடிகள்)

 

இலங்கையில் உள்ள சிவாலயங்களில் திருக்கோணேச்சரம் நீண்ட, தொடர்ச்சியான தலபுராண வரலாற்றைக் கொண்ட சிவத்தலமாகும். வாயு புராணம், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் தேவாரப் பதிகம், அப்பரும், சுந்தரரும் திருக்கோணேச்சரம் தொடர்பில் குறிப்பிட்டுள்ள தேவாரப் பாடல்கள், பெரிய புராணம் போன்றவற்றில் திருக்கோணேச்சரத்தின் தலச் சிறப்பு விரிவாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பத்தாம் நூற்றாண்டில் மச்சகேஸ்வரம் என்ற பெயராலும் அழைக்கப்பட்ட திருக்கோணேச்சரம் தேசத்துக் கோயிலாக முன்னைய காலங்களில் சிறப்பித்துக் கொண்டாடப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.

Tuesday, March 05, 2024

1920களில் சங்கம் அமைத்துச் செயற்பட்ட திருகோணமலைப் பெண்கள்



நெருங்கி வரும் மகளிர் தின நிகழ்வில் உரையாற்றுதலின் பொருட்டு திருகோணமலை மண் சார்ந்த வரலாற்று தகவல் ஏதும் தந்துதவ முடியுமா ? என்று தங்கை கேட்டிருந்தார். குளக்கோட்டனையும் , கோணேசரையும் தேடித் திரிபவனுக்குத் திருகோணமலை மகளிர் வரலாறு பற்றி என்ன தெரியும் என்று மண்டையைச் சொறிந்து கொண்டேன்.

Tuesday, February 20, 2024

சிவப்புக் குல்லாயும், குட்டி நூலகமும்


இடப்பெயர்வுக்கு முன்பு எங்களுடைய வீட்டில் கடைசி அறை என்று அழைக்கப்பட்ட சிறிய அறையில் அப்பா ஒரு குட்டி நூலகத்தை உருவாக்கி இருந்தார். நாவல்கள், சிறுகதைகள்,  கவிதைகள், தத்துவ நூல்கள், இலக்கண நூல்கள், சஞ்சிகைகள் அன்று அவருக்குப் பிடித்தமானவற்றையெல்லாம் தேடிச் சேகரித்திருந்தவர் சிறுவர்களுக்கான நூல்களுக்காக தனியான பகுதி ஒன்றையே வைத்திருந்தார்.

Tuesday, October 31, 2023

1600களில் திருக்கோணேச்சர ஆலயச் சூழல்.

 

இளையவர்கள் 400 வருடங்களுக்கு முந்திய திருக்கோணேச்சர ஆலயச் சூழலைப் புரிந்து கொள்வதற்கான செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கூடிய காட்சிப் பதிவு. 

நட்புடன் ஜீவன்.

Wednesday, October 25, 2023

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியின் புராதன இடங்கள் - புகைப்படங்கள்

வேலை நிமித்தம் கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் நடமாடிய பொழுது காணக் கிடைத்த மூன்று புராதன இடங்கள் இங்கே சுருக்கக் குறிப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Friday, October 20, 2023

திருக்கோணேச்சரம் - Thirukoneswaram temple

 


400 வருடங்களுக்கு முந்திய திருக்கோணேச்சரத்தை செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்கும் முயற்சி.
An attempt to design the Thirukoneswaram temple in the 17th century (1600) with the help of artificial intelligence. நட்புடன் ஜீவன்.