இவர்களுக்கும் இடம் உண்டு

இந்தியாவில் வாக்குரிமைக்கான வயது 18. ஆனால், 38 வயதில்தான் தனக்கான வாக்குரிமையைப் பெற்றிருக்கிறார் நளினி கிருபாகரன்.
காரணம், இவர் தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்.

வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம்

(ஜே.ஏ.ஜோர்ஜ்)

“அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” –  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார்.

கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக  1,700 ரூபாவினை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலையை தூக்கியது டொலர்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 16 நாட்களுக்குப் பின்னர் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 305.16 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.28 ரூபாவாகவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

“21/4 குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்போம்”

ஈஸ்டர் குண்டுவெடிப்பு என்பது நாடுகளுக்கு இடையே ஒற்றுமையின்மையை உருவாக்கி, இனக் கலவரங்களை ஏற்படுத்தி, மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பெரும் சேதம் விளைவித்து, குறுகிய அரசியல் நோக்கத்தை அடைவதற்காக நடத்தப்பட்ட சதியே ஆகும் 2019 ஏப்ரல் 21, அன்று ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் சூத்திரதாரிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் எமது ஆட்சியில்  தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று ​பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அறிவித்துள்ளது,

அதிக உயிரிழப்புகளுக்கான காரணம் கண்டுபிடிப்பு

இலங்கையில் கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தோல்விப் பயத்தில் எம்.பிக்கள் மாற்றுத் திட்டமில்லாத மக்கள்

  (மொஹமட் பாதுஷா)

இதயத்துடிப்பு கண்காணிப்புக் கருவியின் வாசிப்பைப் போல தேர்தல் பற்றிய பேச்சுக்கள்; ஏற்ற. இறக்கங்களாக சென்று கொண்டிருக்கின்றன. முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மக்களும் எந்தத்; தேர்தலையும் எப்படி எதிர்கொள்வது என்ற எந்த திட்டமிடலும் முன்னேற்பாடும் இல்லாமல் இருப்பதை தௌ;ளத்தெளிவாக காண முடிகின்றது.

ரூ.1,900 கொத்துரொட்டி வர்த்தகருக்கு பிணை

கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் உள்ள  வீதி உணவுப் பகுதியில் உணவு வாங்க வந்த   வெளிநாட்டவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்ட  உணவக உரிமையாளரைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான்  நீதிமன்றம் புதன்கிழமை (17) உத்தரவிட்டது.

வாக்களிக்கும் முதல் வாய்ப்பு

இயல்பாக கிடைத்திருக்கூடிய வாய்ப்பு…நீதிமன்றம் மூலமாகப்பெறவேண்டிய சூழல் தான் இன்னும் இருக்கிறது.இவருக்கான முழுமையான நீதி இன்னும் கிடைத்துவிடவில்லை.இவரைப்போல இன்னும் ஆயிரத்திற்கும் மேலானவர்கள் இந்திய குடியுரிமை மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் பயனாளிகளாக இருக்க வேண்டியவர்கள் முகாம்களில் நாடற்றவர்களாக…இந்த நிலை தொடர முழு முதற்காரணம் இந்த மக்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்காத அதிகாரிகளும் இந்த மக்களை தங்களது பிழைப்பிற்கான ஆதாராமாய் அணுகும் தொண்டு நிறுவனமுமே…

(நன்றி: சரவணன்)

திடீரென விலை அதிகரிப்பு

பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சியின் விலையை வியாபாரிகள்  தன்னிச்சையாக உயர்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டிகைக் காலங்களில் கோழி  இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை குறைக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்த போதிலும் அவ்வாறான நிலைமை சந்தையில் காணப்படவில்லையென மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.