Header image alt text

25.04.1985 இல் மரணித்த தோழர் நாதன் (தேவராஜ் ஜெயசிங்கம் – மன்னார்) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

மலர்வு : 1940.06.07
உதிர்வு : 2024.04.24
யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஆச்சிபுரத்தை வாழ்விடமாகக் கொண்டவரும், தோழர் சுதா (மு.நேசராசா) அவர்களின் அன்புத்தாயாருமான திருமதி முத்துவேல் கண்மணி அவர்கள் நேற்று (24.04.2024) காலமானார். அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந் துயரினை பகிர்ந்து கொள்வதோடு, அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கின்றோம்.

Read more

ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கைக்கு வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மீண்டும் ஈரான் நோக்கி புறப்பட்டார். ஈரானுக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். நேற்று உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைப்பதற்காக அவர் இலங்கைக்கு வருகை தந்தார். இதேவேளை ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. Read more

இரா.சம்பந்தனுக்கு வேதனத்துடன் 3 மாதம் விடுமுறை வழங்குவதற்கு நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டுள்ளது. இரா.சம்பந்தன் சுகவீனமுற்றிருப்பதால் அவருக்கு விடுமுறை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்த நிலையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆதரித்துள்ளார்.

  • இலங்கையின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் சுபீட்சம் தொடர்பில் ஈரானிய ஜனாதிபதியின் வலுவான நம்பிக்கை.
  • இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், கடன் மறுசீரமைப்பிற்கும் ஈரான் அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு இலங்கை ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு.
  • இரு நாடுகளுக்கும் இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்து.

Read more

பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் வாஜித் ஹஸன் ஹஷ்மி ஆகியோரும் கலந்துகொண்டனர். பரஸ்பர நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கிடையில் இடம்பெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலில், இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வரும் உறுதியான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

Read more

துயர் பகிர்வு!

Posted by plotenewseditor on 25 April 2024
Posted in செய்திகள் 

அமரர் முத்துவேல் கண்மணி அவர்கள்
மலர்வு : 1940.06.07  

உதிர்வு : 2024.04.24

யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஆச்சிபுரத்தை வாழ்விடமாகக் கொண்டவரும், தோழர் சுதா (மு.நேசராசா) அவர்களின் அன்புத்தாயாருமான திருமதி முத்துவேல் கண்மணி அவர்கள் நேற்று (24.04.2024) காலமானார். Read more

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு விசாரணைகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறித்த வழக்கு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த வழக்கு மீதான விசாரணைகள் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது அதன் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் பொதுச் செயலாளராக ச.குகதாசனும் தெரிவு செய்யப்பட்டனர். Read more

24.04.1984ல் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் மரணித்த பொதுவுடைமைவாதி, காந்தீய செயற்பாட்டாளர், ‘விடுதலை’ இதழாசிரியர், கழகத்தின் தளபதி தோழர் பார்த்தன் (இராஜதுரை ஜெயச்சந்திரன்) அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
தோழர் பார்த்தன்
இரா.ஜெயச்சந்திரன்
மலர்வு – 06.07.1959
உதிர்வு – 24.04.1984
பாட்டாளி மக்களின் மறுவாழ்விற்காகவும் பாதுகாப்புக்காகவும் அயராது பாடுபட்டவர்.

Read more

இலங்கைக்கு வருகைதந்த ஈரானிய உள்துறை அமைச்சரை கைது செய்ய வேண்டும் என ஆர்ஜென்டினா கோரியிருந்த நிலையில், குறித்த அமைச்சர் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸியுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை என ஏஎஃப்பி செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. 1994ஆம் ஆண்டு ஆர்ஜென்டினாவின் தலைநகரில் யூத சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 85 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஈரானின் தற்போதைய உள்துறை அமைச்சர் அஹமட் வஹ்டியே காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. Read more